இனக் கலவரத்தை தூண்டவும், சுய விளம்பரத்துக்காகவும்தான் எச்.ராஜா பேசுகிறார் - அகில இந்திய பார்வர்டு பிளாக் கண்டனம்...

 
Published : Jan 17, 2018, 08:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
இனக் கலவரத்தை தூண்டவும், சுய விளம்பரத்துக்காகவும்தான் எச்.ராஜா பேசுகிறார் - அகில இந்திய பார்வர்டு பிளாக் கண்டனம்...

சுருக்கம்

H. Raja speaks for stimulating communal riots - All India Forward Bloc condemns ...

மதுரை

இனக் கலவரத்தைத் தூண்டும் விதமாகவும், சுய விளம்பரத்துக்காகவும் பா.ஜ.க-வின் தேசிய செயலர் எச்.ராஜா பேசுவது கண்டனத்துக்கு உரியது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு) மாநிலப் பொதுச் செயலர் பி.பி.இளையரசு தெரிவித்துள்ளார்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு) மாநிலப் பொதுச் செயலர் பி.பி.இளையரசு நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "ஆண்டாள் குறித்து பேசியதற்கு கவிஞர் வைரமுத்து வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில்,  இனக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா பேசுவது கண்டனத்துக்கு உரியது.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இதயங்களில் இருப்பவர் கவிஞர் வைரமுத்து. நாட்டுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும், திரைத் துறைக்கும்  பெருமைச் சேர்த்தவர். அவரது கவிதை படைப்புகள் முக்காலத்தையும் வென்று நிற்கும்.  நாட்டின் உயரிய விருதுகளைப் பெற்றவர்.  இவற்றையெல்லாம் மறந்துவிட்டு சுயவிளம்பரத்துக்காக ஹெச். ராஜா பேசுவது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!