ஜி.எஸ்.டி வரி முழுமையாக ரத்து - வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்...

 
Published : Feb 07, 2018, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
ஜி.எஸ்.டி வரி முழுமையாக ரத்து - வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

GST Tax Complete Cancellation - Trading Society Demonstrations

திருவாரூர்

வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று திருவாரூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன்,

நாகை வடக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர்கள் ஞானசேகரன், தென்னரசு ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "நகராட்சி, மாநகராட்சி மற்றும் அறநிலையத்துறை கடை வாடகையை உயர்வு மறுபரிசீலனை செய்து முறைப்படுத்திட வேண்டும்.

கட்டிடங்களுக்கான சொத்து வரி உயர்வை நடப்பு ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

வணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் சிவசுப்பிர மணியன், சுப்பு, மாநில இணை செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர்கள் பக்கிரிசாமி, சத்தியநாராயணன், நவநீதம், குகன், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ராஜேந்திரன், வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட அமைப்பு செயலாளர் அருள் நன்றித் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு.! சுத்துப்போட்ட சுங்கத்துறை அதிகாரிகள்.! நடந்தது என்ன?
ஜன.20ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை.. சபாநாயகர் அறிவிப்பு