இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு - 15 லட்சம் பேர் எழுதுகின்றனர்

First Published Nov 7, 2016, 2:39 AM IST
Highlights


இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு - 15 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் 301 மையங்களில் 15 லட்சம் பேர் எழுதும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர், வரைவாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தொகுதியின் கீழ் வருகின்றன.

இதன்படி, 5,451 காலியிடங்களுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் கூடங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு எழுதுவோருக்கு தேர்வு மைய ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதுபவர்கள், தங்களின் விண்ணப்ப எண்/ பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை இணையதள பக்கத்தில் உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தையும் அதே இணையதளப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் இல்லாவிட்டால் அனுமதிக்க முடியாது என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எவ்வித எலெக்ட்ரானிஸ் பொருட்களும் தேர்வுக்கூடத்திற்கு எடுத்து செல்லவோ, வைத்திருக்கவோ அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!