தங்கையை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை... ஏற்கனவே கல்யாணமான அக்காவுடன் ஓடிப்போன கொடுமை

 
Published : May 31, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
தங்கையை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை... ஏற்கனவே  கல்யாணமான அக்காவுடன் ஓடிப்போன கொடுமை

சுருக்கம்

groom ran with bride sister

தங்கையை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை, ஏற்கனவே வேறொருவருடன்  கல்யாணமான அவரது அக்காவுடன் வீட்டைவிட்டு ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர், ஏகாம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் ஸ்வேதா. இவருக்கும் சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக  திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

முருகனின்  இளைய மகள் ராதிகாவிற்கு  கடந்த சில மாதங்களாக திருமண ஏற்பாடுகள் நடந்தது. அப்போது, அண்ணாதுரை என்பவர் கடந்த ஜனவரி மாதம் திருமணத்திற்கு ராதிகாவை பெண் பார்க்க வந்துள்ளார்.

பெண் பார்த்துவிட்டு சென்ற பிறகு திருமணம் விஷயமாக ராதிகாவின் அக்காவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிகொண்டுயிருந்தார். தங்கையிடம் அதிகமாக பேசுவதற்கு பதிலாக அக்காவுடன் அதிகமாக பேசியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கை ராதிகாவிற்கு தெரியாமல் இரவிலும் பேசுவார்களாம்.   இதனால் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.

இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போகும் நிலைக்கு வந்த ஸ்வேதா வீட்டிலிருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சத்துடன் தன் குழந்தையையும் கூட்டிகொண்டு மயிலாப்பூர் லஸ்கார்னர் பகுதியில் காத்திருந்த அண்ணாதுரையுடன்  ஓடிப்போனதாக தெரியவந்தது. 

இதுகுறித்து, ராதிகா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கையை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை, ஏற்கனவே வேறொருவருடன்  கல்யாணமான அவரது அக்காவுடன் வீட்டைவிட்டு ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல் துறை இருவருவரையும் வலைவீசித் தேடிவருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!