ஏப்.24 அன்று கிராம சபை கூட்டம்... அறிவித்தது தமிழக ஊரக வளர்ச்சி துறை!!

Published : Apr 17, 2022, 07:35 PM IST
ஏப்.24 அன்று கிராம சபை கூட்டம்... அறிவித்தது தமிழக ஊரக வளர்ச்சி துறை!!

சுருக்கம்

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்த நிலையில், பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் வரும் 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து, உறுதிமொழி ஏற்கவேண்டும். கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதை அனைத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் கிராம சபை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை