இன்று பெரம்பலூரில் 121 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்; என்னவெல்லாம் விவாதிக்கப் போகிறார்கள்?

First Published Oct 2, 2017, 10:22 AM IST
Highlights
Gram Sabha meeting in 121 panchayats today in Perambalur What are they going to discuss?


பெரம்பலூர்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள 121 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சிறப்பாக நடைபெறுவதைக் கண்காணிக்க ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வேலைகளை எடுத்து செய்ய ஆலோசித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும், ஊராட்சியின் 2016 - 17-ஆம் ஆண்டறிக்கை மற்றும் வரவு, செலவு ஆகியவை கிராம சபைக்கு முன்பு சமர்ப்பித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்றுதல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் என திரளாக பங்கேற்க உள்ளனர்.

click me!