பல வருட கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுது; திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாட்டம்…

 
Published : Oct 02, 2017, 10:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
பல வருட கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுது; திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாட்டம்…

சுருக்கம்

many years demand is happen this year Tirupur Kumaran birthday party celebration on behalf of Government ...

நீலகிரி

திருப்பூர் குமரனின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்ற பல வருட கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுகிறது.

திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஈரோடு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருப்பூர் குமரன் பிறந்த நாளான அக்டோபர் 4-ஆம் தேதி விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அரசு சார்பில் தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா அக்டோபர் 4-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி சென்னிமலையில் உள்ள அவரது வீடு, சிலை புதுப்பொலிவு பெறுகிறது.

சென்னிமலை வடக்கு ராஜா வீதியில் உள்ள தியாகி குமரன் சிலைக்கு வர்ணம் தீட்டும் பணி மூன்று நாள்களாக நடைப்பெற்றது. தற்போது தங்க நிறத்தில் சிலை மின்னுகிறது.

அதேபோல, அவர் பிறந்த வீடு முழுவதும் சுத்தம் செய்யும் பணி, வீட்டுக்கு வண்ணம் தீட்டும் வேலையும் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர் என்பது கொசுறு தகவல்.

PREV
click me!

Recommended Stories

எங்களுக்கு 6 சீட்டா? அப்படி சொன்ன கட்சிக்கு அழிவுக்காலம் ஆரம்பிச்சுருச்சு.. பிரேமலதா ஆவேசம்!
சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!