பேராசிரியை நிர்மலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு! நிர்மலாவை விசாரிக்க ஆளுநருக்கு கல்லூரியின் முன்னாள் முதல்வர் கடிதம்!

First Published Apr 16, 2018, 12:52 PM IST
Highlights
Governor should inquire the professor Nirmala - former principal Murali


மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா குறித்து விசாரிக்க வேண்டும் என கல்லூரியின் முன்னாள் முதல்வர் முரளி வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார். 

ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான்
பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.

மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்த நிலையில், மாணவிகளை அட்ஜெஸ்ட் செல்லுமாறு பேராசிரியை பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார். 

click me!