விஸ்வரூபம் எடுக்கும் கல்லூரி மாணவன் தற்கொலை - சடலத்தை சாலையில் போட்டு போராட்டம்...!

 
Published : Oct 27, 2017, 06:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
விஸ்வரூபம் எடுக்கும் கல்லூரி மாணவன் தற்கொலை - சடலத்தை சாலையில் போட்டு போராட்டம்...!

சுருக்கம்

Government Gavin College student Prakash has committed suicide and Vellore has been involved in the picket with the corpse in front of the grave.

அரசு கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், வேலூர் கல்லறைத்தோட்டம் எதிரே  சடலத்துடன் உறவினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

எழும்பூர் கவின் கலைக்கல்லூரியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இயங்கி வரும் அரசு கவின் கலைக் கல்லூரியில் செராமிக்  துறையில் இறுதியாண்டு படித்து வந்தார். 

இவருக்கு கல்லூரியில் துறைத்தலைவர் மூலம் மிகுந்த நெருக்கடிகள் தரப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பிரகாஷ் சொந்த ஊரான வேலூர் சென்றிருந்தார். இதைதொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தகவலறிந்து வந்த போலீசார் பிரகாஷிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், தனது சாவுக்கு துறைத்தலைவர் மட்டுமே காரணம் என குறிப்பிட்டிருந்தார். 

இதைதையடுத்து  கல்லூரி முதல்வர் மீதும் சம்பந்த பட்ட துறைத்தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வேலூர் கல்லறைத்தோட்டம் எதிரே  சடலத்துடன் உறவினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

மாணவர் தற்கொலைக்கு காரணமான கல்லூரி முதல்வர், துறை தலைவரை கைது செய்ய உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?