தஞ்சாவூரில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாட்டில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது உதவியாளரை ஒருமையில் திட்டி பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மேலவஸ்தாசாவடியில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி பலி! இதற்கு அரசு தான் பொறுப்பு! சொல்வது யார் தெரியுமா?
இதில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம் என பேச ஆரம்பித்த போது சட்டென திரும்பி மைக்கை ஆனில் வைத்துக் கொண்டே எங்கயா அவன், பரசுராமன் எங்கே என்றார்.
உதவியாளர் ஓடி வர `எருமை மாடா டா நீ, பேப்பர் எங்கே? என்றார். அப்போது குறிப்பு எழுதப்பட்ட பேப்பரை எடுத்து வந்து அமைச்சரிடம் கொடுத்தார். ஆனால், அந்த பேப்பரை கையில் வாங்கியதும் அதை தூக்கி வீசி எறிந்தார்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
அரசு நிகழ்ச்சியில் அவ்வளவு பேர் மத்தியில் அமைச்சர் தனது உதவியாளரை ஒருமையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.