
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் பயங்கர சத்தத்தோடு ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் ஆட்டோவில் பயணித்த கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் சென்ற பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வந்த தக்கலை காவலாளர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து மற்றும் ஆட்டோவை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்த காவலளர்கள், அரசு பேருந்து ஓட்டுநரான மேக்கோட்டைச் சேர்ந்த ஜெனிஃபரிடம் விசாரித்து வருகின்றனர்.