
விழுப்புரம்
விழுப்புரத்தில், பேருந்தை ஓட்ட கட்டாயப்படுத்தியதால் அரசு பேருந்து ஓட்டுநர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், மூன்றாவது பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஹென்றி பால்ராஜ். இவர் பணிமனையின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பேருந்து ஓட்டிவிட்டு பணிமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் ஹென்றி. இவரை பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளர் கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால், ஹென்றி பால்ராஜ் அதற்கு மறுத்துள்ளார்.
தொடர்ந்து ஹென்றியைக் கட்டாயப்படுத்தியதால் அவர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
கீழே விழுந்த ஹென்றிக்கு தலையில் பலத்த காயம் மற்றும் கையில் எலும்பு முறிவடைந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.