அடித்தும், கெட்ட வார்த்தையால் திட்டியும் பாலியல் தொந்தரவு.. அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது

Published : Sep 02, 2022, 01:13 PM IST
அடித்தும், கெட்ட வார்த்தையால் திட்டியும் பாலியல் தொந்தரவு.. அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது

சுருக்கம்

கரூர் மாவட்டம் தோகைமலை பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குண்ணாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஆசிரியர் மருதை. இவருக்கு வயது 59. திருமணம் ஆகாத நிலையில் தனது சகோதரியின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக உள்ளார்.

மேலும் படிக்க:பொறியியல் பட்டதாரிகள் கவனத்திற்கு.. சென்னை மெட்ரோவில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது..?

இவர் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுக்கிறார். இந்நிலையில் இவர் மீது அப்பள்ளி தலைமை ஆசிரியர் லாரா ஜேசுராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். தன்னிடம் பாடம் படிக்கும் மாணவ- மாணவிகளை அடித்தும், கெட்ட வார்த்தையால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:சுங்க கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் முதுகை உடைப்பதா? அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு- சிபிஎம்

இதனையடுத்து புகாரின் அடிப்படையில் போக்சா சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார், ஆசிரியர் மருதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்