10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்.. "தாராளமா மார்க் போடுங்க".. ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!

By vinoth kumarFirst Published Jun 2, 2022, 2:55 PM IST
Highlights

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், அடுத்த வாரத்தில் 11ம் வகுப்பு  வுிடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. என்னவென்றால் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்கள். 

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு நடந்த முதல் பொதுத்தேர்வு. முழுமையாக பள்ளி இயங்காத நிலையில் அறைகுறை நிலையில் பள்ளிகள் இயங்கியது. மேலும், மாணவர்கள் கடந்த பொதுத்தேர்வுகளை சந்திக்காமல் நேரடியாக 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வை சந்தித்தன் காரணமாக அச்சத்துடன் தேர்வை எழுதினர். பல்வேறு சூழல் இருக்கக்கூடிய சூழலில் மாணவர்கள் தேர்வை எழுதி முடித்து இருக்கிறார்கள். 

எனவே 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. தாராளமாக மதிப்பெண்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை பச்சைக்கொடி காட்டியுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!