அடேங்கப்பா! ஒரேநாளில் ரூ.3 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்; பக்ரித் நெருங்குவதால் போட்டிப் போட்டு வாங்கிய மக்கள்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 16, 2018, 9:12 AM IST
Highlights

விழுப்புரம் நடைப்பெற்ற வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்கப்பட்டன. 

விழுப்புரம் நடைப்பெற்ற வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்கப்பட்டன. பக்ரித் பண்டிகை நெருங்குவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புகழ்பெற்ற வாரச்சந்தை ஒன்று உள்ளது. இங்கு புதன்கிழமை தோறும் நடைப்பெறும் சந்தைக்கு உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், சங்கராபுரம், அரசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவர். 

விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியங்களை கொண்டு வந்து விற்பர். அதுமட்டுமின்றி ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் விற்பனையும் இங்கு அமோகமாக நடக்கும். இங்கு விற்கப்படும் அரிசி, தானியங்கள், பயிறுவகைகள், காய்கறிகள், ஆடு, மாடு போன்றவற்றை வாங்கவும், சந்தையைப் பார்க்கவும் பொதுமக்கள் கூடுவது வழக்கம்.

அதன்படி, நேற்று இங்கு வாரச்சந்தை நடைப்பெற்றது. இதில், ஏராளமான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். இங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர். ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.4000 முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை விலை போனது.

இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரித் பண்டிகை நெருங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களும் இதில் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி, நல்ல கொழுத்த கறி ஆடுகளை தேடி பார்த்து வாங்கிச் சென்றனர். 

அதன்படி, இங்கு விற்கப்படும் ஆடுகளை வாங்க சேலம், திருச்சி, கடலூர், ஈரோடு மற்றும் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்தம் வந்திருந்தனர். இவர்களை ஆடுகளை போட்டிப் போட்டு வாங்கிச் சென்றனர். நேற்று நடைப்பெற்ற இந்த வாரச்சந்தையில் மட்டும் மொத்தம் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!