திருப்பூரில், பட்டியில் புகுந்த வெறிநாய்கள் கொடூரமாகக் கடித்துக் குதறியதில் 10 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
திருப்பூர்
திருப்பூரில், பட்டியில் புகுந்த வெறிநாய்கள் கொடூரமாகக் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியம், முள்ளிப்புரம் அருகேவுள்ளது அரண்மனைக்காட்டுத் தோட்டம். இங்கு செல்வம் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக 15 ஆடுகள் உள்ளன. அவற்றை அன்போடு வளர்த்து வருகிறார்.
இந்த ஆடுகளை காலை, மாலை என இரண்டு வேளையும் மேய்ச்சல்லுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். பின்னர், இரவு பட்டியில் அடைத்துவிடுவார். அதேபோன்று நேற்று முன்தினம் இரவும் மேய்ச்சல்லுக்கு சென்றுவிட்டு திரும்பிய ஆடுகளை வழக்கம்போல பட்டியில் அடைத்தார். பின்னர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
நேற்று காலை பட்டியில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சல்லுக்கு அழைத்துச் செல்ல வந்தார் செல்வம். அங்கு 10 ஆடுகள் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என்னாச்சுடா கண்ணுங்களா? என்று அருகில் சென்று பார்த்தபோது அவரை கடித்துக் குதறப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார் செல்வம்.
அதிர்ச்சி அடைந்த செல்வம் இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தக்காடையூர் கால்நடை மருத்துவர்கள் இறந்த செம்மறி ஆடுகளை பரிசோதனை செய்தனர்.
"பட்டியில் புகுந்த வெறிநாய்கள் கொடூரமாகக் கடித்துக் குதறியதில் இந்த ஆடுகள் இறந்திருக்கலாம்" என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்துபோன ஆடுகளின் மதிப்பு ரூ.90 ஆயிரம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஊதியூர் அருகேவுள்ள ஐயாக்குட்டிவலசு பகுதியில் வசிக்கும் முத்துச்சாமி என்பவரின் 14 ஆடுகளும் இதேபோல இறந்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவ இந்தப் பகுதியில் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.