
கத்தி முனையில் காதலன் முன்பே பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் செய்யூர் அருகே நெடுமரம் கிராமத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே நெடுமரம கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் கூவத்தூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த பெண், வேலையை முடித்துவிட்டு, நெடுமரத்தில் உள்ள தனது காதலனைச் சந்தித்து வருவார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று, இந்த பெண் வேலையை முடித்துவிட்டு, காதலனோடு சென்றிருக்கிறார். அப்போது, இவர்களை நான்கு பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்துள்ளனர்.
இந்த பெண் மற்றும் அவளின் காதலன் உடன் நெடுமரம் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த கும்பல், காதலனை அடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, காதலன் கண் முன்னே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதை நண்பரிடம் தெரிவித்துள்ளார். அந்த நண்பர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலர் கொடுத்த அடையாளங்களைக் வைத்து குற்றவாளிகளைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். 4 பேர் கொண்ட கும்பல், இளம் பெண்ணை பலாத்காராம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.