
திருவாரூர்
மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடையை திருமப் பெற வேண்டும் என்றும் இல்லையேல் வருகிற 9-ஆம் தேதி மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என விவசாயிகள் முடிவு எடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசலில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கூறியது:
“மாடுகளை விற்பனை செய்வதில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும், மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
விவசாயிகளுக்கு விடுபட்டுள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசலில், தலைமை அஞ்சலகம் எதிரில் ஜூன் 9-ஆம் தேதி மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் சம்பந்தம் தலைமை தாங்குகிறார்.
மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்
இதேபோல், திருவாரூர், நன்னிலம், வலங்கைமான், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பத்து ஒன்றியத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.