#BREAKING: விஷ வாயு தாக்கி ஒருவர் பலி..13 பேர் சிகிச்சை..

Published : Dec 11, 2021, 06:32 PM IST
#BREAKING: விஷ வாயு தாக்கி ஒருவர் பலி..13 பேர் சிகிச்சை..

சுருக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பிளீச்சிங் பவுடர் தயாரிப்பு ஆலையில் குளோரின் வாயு கசிவால் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், 13 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்து , சிகிச்சையாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஈரோடு மாவட்டத்தை அடுத்த சித்தோடு நல்லாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் தனியார் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ப்ளீச்சிங் பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல ஆலை உரிமையாளர் தாமோதரன் உட்பட 14 ஊழியர்கள் ப்ளீச்சிங் பவுடர் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நச்சுத்தன்மையுள்ள லிக்விடு குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. ஆலையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதையடுத்து சித்தோடு, பவானி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். நச்சுத்தன்மை பாதிக்காத வகையில் பிரத்யேக உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

ரசாயன வாயு கசிவுற்றதால் அதை சுவாசித்த, ஆலையில் உரிமையாளர் நடுப்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 13 பேர், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி ஆலை அருகே இருந்த தறி பட்டறை தொழிலாளர்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நெல்லை டூ பழனி, பொள்ளாச்சிக்கு புது ரயில் வந்தாச்சு.. பயணிகள் குஷி! அட்டவணை என்ன?
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.. திருச்சியில் பிரதமர் மோடி சூளுரை..