400-க்கும் மேற்பட்டோர் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்ட விளையாட்டுப் போட்டிகள்…

Asianet News Tamil  
Published : Nov 08, 2016, 03:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
400-க்கும் மேற்பட்டோர் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்ட விளையாட்டுப் போட்டிகள்…

சுருக்கம்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களைச் சேர்ந்த ஆதிபராசக்தி அன்னை இல்ல சிறப்புக் குழந்தைகள் மையத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில் கபடி, ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.  இதில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த[ போட்டிகளில் வென்றவர்களுக்கு ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ் பரிசு, நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி நன்றி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தை அமாவாசை.! ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? இன்றைய நிலவரம் குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!