இன்னும் சில நாட்களில் செம காட்டு காட்டப்போகும் வெயில்... மே மாதம் வரை 5 டிகிரி அதிகமாக இருக்குமா?!

First Published Mar 8, 2018, 10:56 AM IST
Highlights
From March to May the sun is 5 degrees


தமிழகத்தில் சின்னும் சில நாட்களிலிருந்து முதல் மே மாதம் முடியும் வரை வரை வழக்கத்தைவிட 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெயில் தாக்கம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் திருத்தணி, வேலூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் வெயில் தாக்கம் 110 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரிக்கு மேல் இருந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் கோடையில் வெளுத் தெடுத்த வெயிலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டவர்கள் வெயில் தாக்கத்தால் பலியானார்கள்.

கோடை வெயில் வழக்கன்மாக மார்ச் இறுதியில் தான் வெயில் தாக்கம் தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாத தொடக்கத்திலேயே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் மேற்குப் பகுதிகளான சேலம், கோயம்பத்தூர் உள்ளிட்ட சில நகரங்களில் இப்போதே 100 டிகிரியை எட்டத் தொடங்கிவிட்டது. ஆண்டும் வெயிலின் உக்ரம் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.



இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் முடியும் வரை வரை கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் வெப்பம் சுட்டெரிக்கும். முக்கியமாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் சராசரியைவிட ஒரு டிகிரிக்கு மேல் அனல் கக்கும்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் வழக்கத்தைவிட 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெயில் அளவு பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய பகுதிகளில் வெயில் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படுமாம்.



கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் அதனை சமாளிக்க என்ன செய்யலாம்? என்று ஒவ்வொருவரும் தற்போது திட்டமிட தொடங்கிவிட்டனர். கோடையை சமாளிக்கும் வகையில் தலைநகரில் பல இடங்களில் தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நொங்கு விற்பனை களைகட்டியுள்ளது. சாலையோரங்களில் பழங்கள் குவித்துவைக்கப்பட்டு விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது.



5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் விரைவில் இறுதி தேர்வுகளை நடத்திமுடித்து, முன்கூட்டியே விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

click me!