
தருமபுரி
தருமபுரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கின.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கி பிப்ரவரி 4-ஆம் தேதி வரை, அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளும் இதில் பங்கேற்கலாம். எனவே,தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ம. மகேஸ்வரி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.