நிருபர் என கூறி பணப்பரிப்பில் ஈடுபட்ட டுபாக்கூர் நிருபர் அதிரடி கைது!

By manimegalai a  |  First Published Sep 29, 2018, 3:05 PM IST

பாலக்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அருகே சாமனூர் பகுதியை சேர்த்த  டிராக்டர் உரிமையாளர் அருள் பிரகாஷ் (32)அவரும் அவருடைய நண்பர்கள் நந்திவர்மன், லட்சுமனன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை 8 மணி சுமாருக்கு சாமனூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பேசிக் கொண்டிருந்தனர்.
 


பாலக்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அருகே சாமனூர் பகுதியை சேர்த்த  டிராக்டர் உரிமையாளர் அருள் பிரகாஷ் (32)அவரும் அவருடைய நண்பர்கள் நந்திவர்மன், லட்சுமனன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை 8 மணி சுமாருக்கு சாமனூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஜக்க சமுத்திரம் அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த ரங்க ஐயர் மகன் பிரபாகரன் (47) என்பவர் தான் கேப்டன் டிவி சேனலின் நிருபர் என்றும் நீங்கள் இன்று இரவு மணல் லோடு ஓட்டி கொள்ளுங்கள் எனக்கு இப்போது 5 ஆயிரம் பணம் கொடுங்கள் என மிரட்டியுள்ளார்.

Tap to resize

Latest Videos

 மேலும் அதிகாரிகள் அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்பார்கள் என கூறியுள்ளார். பணம் கொடுக்க மறுத்த அருள்பிரகாசை  தகாத வார்த்தையால் திட்டியதுடன் கன்னத்தில் ஓங்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதனையடுத்து அருள் பிரகாஷ் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார் இதனை அறிந்த பிராபகரன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது அதிகாலை ஜக்க சமுத்திரம் கூட்ரோடு பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த  தகவலை யடுத்து மாரண்ட அள்ளி உதவி ஆய்வாளர் பெருமாள் தலமையிலான போலீஸார் நிருபர் எனக்கூறி கொண்டு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரை மிரட்டி பணம் பறித்துவந்த  "பிரபாகரனை" கைது செய்து விசாரணை செய்ததில்,   பிரபாகரன், பிரபல டிவி, மற்றும் பத்திரிக்கையில் நிருபராக இருப்பதாக கூறி பலரையும் ஏமாற்றி  பணம் பறித்து வந்ததும் அவர் நிருபரே இல்லை டுபாக்கூர் நிருபர் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஊரை ஏமாற்றி பணம் பறித்து வந்த டுபாக்கூர் நிருபர் பொம்மனூர் பிரபாகரனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . மேலும் இவர் மீது மூன்று வழக்குகள் பாய்ந்துள்ளது.

click me!