இதை செய்தால் இனி போலீஸுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை!!!

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 28, 2018, 10:08 AM IST
Highlights

பைக்கில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று இல்லாவிட்டால் வழக்குப் போடப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. எனவே, பைக்கில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்தால் போலீஸுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை. 
 

தருமபுரி

பைக்கில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று இல்லாவிட்டால் வழக்குப் போடப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. எனவே, பைக்கில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்தால் போலீஸுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை. 

 

தமிழ்நாட்டில் மோட்டார் பைக்கில் ஓட்டுபவர் மற்றும் பின்னால் உட்கார்ந்து செல்பவர் என இருவரும் கட்டாயமாக தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது. 

நீதிமன்றத்தில் இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பைக் ஓட்டிச் செல்பவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்திருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்..

எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மோட்டார் பைக் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டினால், பின்னால் உட்கார்ந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

click me!