காட்பாடி அருகே தம்பதி கொலை - சொத்துக்காக உறவினர்களே கூலிப்படையை ஏவியது அம்பலம்...

Asianet News Tamil  
Published : Nov 20, 2017, 07:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
காட்பாடி அருகே தம்பதி கொலை - சொத்துக்காக உறவினர்களே கூலிப்படையை ஏவியது அம்பலம்...

சுருக்கம்

Four persons were arrested in the murder of an elderly couple in Wickramasai near Katpadi.

காட்பாடி அருகே விக்கிரமாசியில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காட்பாடி தாலுகா லத்தேரி அடுத்த விக்ரமாசிமேடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி பொன்னியம்மாள். 

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர்கள் இருவரையும் கடந்த 10ம் தேதி மர்மகும்பல் கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க எஸ்பி பகலவன் 5 தனிப்படைகளை விசாரனை நடத்தி வந்தனர். 

இந்த கொலை தொடர்பாக சதீஷ்குமார், சக்திவேல், முருகன், ராமச்சந்திரனை போலீஸ் கைது செய்தது.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.  அதாவது சொத்துக்காக தம்பதியின் உறவினர்கள் சிலரே, கூலிப்படை வைத்து இக்கொலைகளை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!