அமமுக முக்கிய பிரமுகர்களை மொத்தமாக தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!

Published : Apr 03, 2026, 03:59 PM IST
mk stalin

சுருக்கம்

TTV Dhinakaran: சோளிங்கர் தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியடைந்த அமமுக மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன், அக்கட்சியில் இருந்து விலகினார். 

அதிமுக ஆட்சியில் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர் என்.ஜி.பார்த்திபன். அமமுக சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்த தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் சோளிங்கர் தொகுதியில் களமிறங்க டிடிவி.தினகரன் முடிவு செய்திருந்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைவதற்கு முன்பாகவே, சோளிங்கர் தொகுதி வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை டிடிவி.தினகரன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், சோளிங்கர் இடம்பெறவில்லை. மாறாக, பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால், என்.ஜி.பார்த்திபன் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, கடந்த வாரம் தனது ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்த பார்த்திபன் அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருடன் சேர்ந்து 80-க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகளும் திமுக-வில் ஐக்கியமானார்கள்.

அமமுக நிர்வாகிகள் விவரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.ம.மு.க. மாநில தலைவர் சி.கோபால், Ex.MLA, Ex.MP., தலைமையில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த மாநில தேர்தல் பிரிவு செயலாளர், மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன், Ex.MLA, - மாநில இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்.ஷோபனா நடராஜன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.கோதண்டபாணி, Ex.MLA, மாவட்ட அவைத்தலைவர் நெமிலி தே.பாண்டுரங்கன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.ஆதம்சாயபு, எல்.சங்கீதா, மாவட்ட பொருளாளர் ஜிஎம்.மூர்த்தி - ஒன்றியச் செயலாளர்கள் நெமிலி மேற்கு டி.ஜி.மணி, நெமிலி கிழக்கு கோ.சி.மணிவண்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி மணிவண்ணன், சோளிங்கர் மேற்கு எம்.பழனி, அரக்கோணம் கிழக்கு ஜி.துளசிராமன், அரக்கோணம் மேற்கு ஜி.பாபு, சோளிங்கர் கிழக்கு எஸ்.அரி, பள்ளிப்பட்டு இ.எம்.நடராஜன் – நகரச் செயலாளர்கள் சோளிங்கர் என்.சீனிவாசன், மேல்விஷாரம் கே.அப்ரார், காட்பாடி கவுதம், - பேரூராட்சி செயலாளர்கள் நெமிலி பி.குமார், பனப்பாக்கம், பி.ஹேமச்சந்திரன், கலவை ஆர்.பரத்குமார், தக்கோலம் டி.பலராமன் - மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் எஸ்.வேடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.ரகு உள்ளிட்டோர் இணைந்தனர்.

மேலும் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர்.வசந்தகுமார்ஜெயின், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஆர்.சுமதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்.ஜி.தமிழ்ச்செல்வன், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் எம்.தினேஷ், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் என்.சிவகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் வி.பி.என்.ரமேஷ், வேலூர் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.துரைமுருகன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.எம்.இளஞ்செழியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஜே.ரஞ்சித்குமார், சோளிங்கர் நகர கவுன்சிலர்கள் என்.டி.சுரேஷ், திருமதி எஸ்.ராதிகாசீனிவாசன், திருமதி ஜி.காஞ்சனாகோபிநாதன், திருமதி கே.ராதாகுமார் – நெமிலி பேரூராட்சி கவுன்சிலர் பி.தனசேகரன் மற்றும் வழக்கறிஞர் எஸ்.முராரி, இராணிப்பேட்டை நகர துணைச் செயலாளர் எம்.பரத், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கே.ராஜா, ஐடி விங் துணைச் செயலாளர் ஆர்.சந்தோஷ், சோளிங்கர் நகர மாணவர் அணிச் செயலாளர் ஜே.மதன்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் வி.எம்.அத்திக்ரஹ்மான் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பி.மணிஷ்ஜெயின், முன்னாள் மாநில பேரவை துணைச் செயலாளர் வி.உமாசங்கர், முன்னாள் கீழ்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.தணிகைவேல், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் பி.ரங்கநாதன், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் எஸ்.ராஜேஷ், பொதட்டூர்பேட்டை நகரச் செயலாளர் எம்.ஓ.ஜானகிராமன், பொதட்டூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் எப்.எம்.எஸ்.நடராஜன், மாவட்ட பிரதிநிதி பி.எஸ்.சுரேஷ், கிளைச் செயலாளர் இ.எ.ராமகிருஷ்ணன், நகர தகவல் தெழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.எஸ்.முருகன், நகர மாணவர் அணிச் செயலாளர் பி.தினகரன், மாவட்ட இ.செ.த.தொ. என்.டி.வேலு, வி.குருமூர்த்தி, கீழ்களத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராதிகா தணிகைவேல், சோளிங்கர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஏ.முபாரக், பி.ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி நெமிலி ஜி.பாபு, ஒன்றிய அவைத்தலைவர் கோபால், ராணிப்பேட்டை எம்.சரவணன், சத்துவாச்சாரி பகுதி செயலாளர் கோபி, அரக்கோணம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தன், ஒன்றிய பொருளாளர் பிரேம்நாத், ஊராட்சி செயலாளர் கனகராஜ், காட்பாடி வி.நரேஷ்குமார் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Supplementary Examination: மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? கவலை வேண்டாம்! துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!