தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை என தகவல்..

Published : Mar 10, 2022, 03:20 PM IST
தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை என தகவல்..

சுருக்கம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தயாளு அம்மாவுடன் மகன்கள் மு.க.அழகிரி மு.க.தமிழரசு மகள் செல்வி உடன் உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணநிதியின் மனைவி  தயாளு அம்மாள். இவருக்கு 89 வயதாகிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து தயாளு அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளொயாகியுள்ளது.

இவர் சில ஆண்டுகளாகவே உடல்நலம் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த போதிலிருந்தே, இவரும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட அவரைப் பார்க்க தயாளு அம்மாள் வீல்சேரின்  மூலமாகத்தான் அழைத்துவரப்பட்டார். 

இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வரும் அவரை முக்கிய நிகழ்ச்சிகளின் போது ,  முதல்வரும், மகனுமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இந்நிலையில் தற்போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?