
கேரள மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவை, அப்பல்லோ மருத்தவமனையில் சந்திக்க வந்தார்.
முதலமைச்சா ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல் நலக்குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலோ மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை மூலம் அடிக்கடி தெரிவித்து வருகிறது.
இதைதொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனை சென்றனர். ஆனால், அவரை பார்க்க முடியவில்லை. பின்னர், அமைச்சர்கள் மற்றும் டாக்டர்களை சந்தித்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இதற்கிடையில், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜைகள், பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்னாள் தமிழக கவர்னர் ரோசய்யா, கேரள மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரமேஷ் சென்னிதலா, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கிருந்த அமைச்சசர்கள் மற்றும் டாக்டர்களிடம், முதலமைச்சா ஜெயலலிதாவுக்கு அளிக்கும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அப்பல்லோ மருத்துவமனை முன்பு நேற்று அ.தி.மு.க. மகளிரணி சார்பில் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பாதிரியார்களும் அங்கு கூடிநின்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.