எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டும் – விடாபிடியாய் இருக்கும் அரசு ஓய்வூதியர்கள்…

Asianet News Tamil  
Published : Apr 19, 2017, 08:03 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டும் – விடாபிடியாய் இருக்கும் அரசு ஓய்வூதியர்கள்…

சுருக்கம்

For us to have the old pension scheme state pension will be vitapitiyay

கரூர்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், கரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நேற்றுக் திரளாக கூடினர். அங்கு அவர்கள் சட்டென்று அலுலகத்தின் முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சடையாண்டி தலைமை வகித்தார்.

மாவட்ட துணை தலைவர் வீரய்யா, மாவட்ட இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் கலந்து கொண்டு பேசினார்.

“புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்.

மாதாந்திர மருத்துவ படியினை ரூ.1000-மாக உயர்த்த வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 இலட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரராஜூ நன்றித் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி