
உண்டியல் காணிக்கை புதிய உச்சம்:
ஸ்ரீரங்கம் சென்று வந்தாலே மனக்கவலை பறந்து செல்லும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என பலரும் சொல்வதை கேட்டிருப்போம் அல்லவா..?
அவ்வாறு செல்லும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், வேண்டுதல் நிறைவேறினால் மீண்டும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் பெறுவது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, வேண்டுதலை நிறைவேற்றிய கடவுளுக்கு காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்துவர்.
பக்தர்களின் காணிக்கை ரூ 1, 23 , 19 , 305 ( ஒரு கோடியே 23 லட்சத்து 19 ஆயிரத்து 305 ரூபாய்) செலுத்தியுள்ளனர்.
இது ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் இதுவே அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தங்கம் - 276 கிராமும், வெள்ளி - 1135 கிராமும் காணிக்கையாக உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.