டயர் குடோனில் தீ - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

 
Published : Oct 18, 2016, 08:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
டயர் குடோனில்  தீ - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

சுருக்கம்

ஈரோடு அருகே டயர் குடோனில ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் தீயில் எரிந்து நாசமானது.

 ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஈரோடு ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகரில் பழைய டயர்களை வாங்கி அதனை மறுசீரமைப்பு செய்து டயர்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்தநிலையில் திடீரென இந்த டயர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக  தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்புதுறை வீரர்கள் சுமார் 2மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

 

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
கம்முனு இருப்பது அரசியலில் எடுபடாது.. பேசவேண்டிய இடத்திலாவது பேசுங்கள்.. விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்