ராஜூவ் காந்தி மருத்துமனையில் தீ விபத்து.. ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடிப்பு ? 5 மருத்துவர்கள் ஐ.சி.யு வில் அனுமதி

Published : Apr 27, 2022, 03:24 PM IST
ராஜூவ் காந்தி மருத்துமனையில் தீ விபத்து.. ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடிப்பு ?  5 மருத்துவர்கள் ஐ.சி.யு வில் அனுமதி

சுருக்கம்

சென்னை ராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், நோயாளிகளை மீட்க சென்ற மருத்துவர்கள் மூச்சு திணறலால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

ஆசியாவில் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படுவது சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில் இன்று மருத்துவமனையின் 2வது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் பிரிவில் முகக்கவசம், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதனைக் கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர்.  அங்கு பதற்றமான சூழல் உருவானது. மேலும் தீ விபத்தினால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் உள்ளேயே சிக்கி கொண்டனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கல்லீரல் பிரிவில் சிக்கியிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்.இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்ட அறையில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்று வெடித்ததாக கூறப்படுகிறது.  திடீர் தீ விபத்தால் கட்டடம் முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.  அதிகளவில் புகை எழுந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. நரம்பியல் வார்டில் நோயாளிகளை மீட்க சென்ற 5 மருத்துவர்களுக்கு புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து சென்னை ராஜூவ் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 32 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று கூறினார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!