அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – அதிகாலையில் பரபரப்பு!

By manimegalai aFirst Published Dec 1, 2018, 11:34 AM IST
Highlights

சென்னை பாடி மேம்பாலம் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார்  2 மணி நேரம் போராடி தீணைப்பு வீரர்கள்,தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சென்னை பாடி மேம்பாலம் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார்  2 மணி நேரம் போராடி தீணைப்பு வீரர்கள்,தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சென்னை பாடி மேம்பாலம் அருகே 20 மாடிகள் கொண்ட நியூரி பார்க் டவர்ஸ் அடுக்கு மாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இன்று அதிகாலையில் இந்த கட்டிடத்தில் 18வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வந்தது.

சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

தகவலறிந்து வில்லிவாக்கம், அம்பத்தூர் எஸ்டேட், அயனாவரம், ஜெஜெ நகர், கோயம்பேடு, எழும்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீர்ர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், அந்த கட்டிடத்தில் இருந்த பொது மக்களைஅங்கிருந்து வெளியேற்றி, "அசெம்பிள் பாயின்ட்" எனப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீர்ரகள், ராட்சத தீயணைப்பு இயந்திரங்களை வரவழைத்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் பொருட்கள் அனைத்து தீயில் எரிந்து நாசமானது. அங்கு வசித்த ஒரு முதியவர் உள்பட 2 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

புகாரின்படி வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.‘

 
 

 

click me!