தூத்துக்குடி வெள்ளம்.. மக்களை நேரில் சந்திக்கும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் - மாவட்ட நிர்வாகத்துடன் ஆய்வு கூட்

By Ansgar R  |  First Published Dec 26, 2023, 2:19 PM IST

Nirmala Sitharaman : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று சந்தித்து பேசவுள்ளார். இப்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்.


அண்மையில் பெய்த கனமழையால், தென் மாவட்டங்கள் பல வெள்ளக்காடாக மாறின, இதனை அடுத்து இன்று டிசம்பர் 26ம் தேதி தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியருடன் நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை சந்தித்துப் பேசவுள்ளார். 

மாவட்ட நிர்வாகத்துடனான தற்போது நடந்து வரும் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, பிற்பகல் 2 மணி முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் பார்வையிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் மாநில நிர்வாகம் மற்றும் குடிமைப்பொருள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் கடலோர மாவட்டம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

Latest Videos

தமிழக்ததில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; முதல்முறையாக தென் மாவட்டங்களுக்கு சோகத்துடன் வந்துள்ளேன் - தமிழிசை

தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை அகற்றுவதற்காக தற்காலிகமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர்கள் இப்போது தங்களது வீடுகளுக்கு திரும்புகின்றனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் பாதுகாப்பு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி-திருச்செந்தூர், தூத்துக்குடி-திருச்செந்தூர் ஆகிய நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த பகுதிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அரசுப் பேருந்துகளில் மாணவர்கள், இளைஞர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க போக்குவரத்து கழகம் புது முயற்சி

இந்நிலையில் தூத்துக்குடியில் நடக்கும் பணிக்கு குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்பொது தூத்துக்குடி சென்றுள்ளார். இப்பொது மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்து வரும் நிலையில், இந்த ஆய்வு கூட்டம் முடிந்த பிறகு வெள்ளத்தால் பாத்த மக்களை நேரில் சந்திக்க அவர் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!