டிவியில் டான்ஸ் ஆடும் அண்ணாச்சி கடையில் சிக்கியது என்ன? கிட்டத்தட்ட 433 கோடி வரி ஏய்ப்பு!! ஐடி ஆபீஸர்ஸ் 6 நாளா பண்ண தரமான சம்பவம்...

By sathish kFirst Published Feb 7, 2019, 2:04 PM IST
Highlights

கடந்த வாரம் ரேவதி, லோட்டஸ் குழுமம், ஸ்கொயர் உள்ளிட்ட நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் கிட்டத்தட்ட 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் சில்லறை விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் கடைகளின் கதவை மூடிவிட்டு சோதனை நடத்தி வந்தனர். இதுமட்டுமின்றி சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் செல்வரத்தினம் பொன்னுதுரை வீட்டிலும் சோதனை  நடத்தினர்.

சரவணா ஸ்டோர்ஸ் மட்டுமின்றி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களான ஜி-ஸ்கொயர் மற்றும் லோட்டஸ் குரூப் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கோவையில் ஒரே நேரத்தில் 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 நாட்களாக  வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள், பணம் உள்ளிட்டவை அப்போது கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கணக்கிடுதல், மதிப்பிடுதல் மற்றும் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வந்த இந்த பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன.  ரெய்டு நடத்தப்பட்ட நிறுவனங்கள் 433 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது, அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், கணக்கில் வராத 25 கோடி ரூபாய் பணம், 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரம் ஆகியன சோதனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

click me!