பெற்ற மகளையே ஐந்து வருடங்களாக கற்பழித்த காம கொடூர தந்தை! காஞ்சிபுரத்தில் நடந்த வெறியாட்டம்...

 
Published : Jul 26, 2018, 08:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
பெற்ற மகளையே ஐந்து வருடங்களாக கற்பழித்த காம கொடூர தந்தை! காஞ்சிபுரத்தில் நடந்த வெறியாட்டம்...

சுருக்கம்

father Sexual abuse of the past five years with his daughter

பெற்ற மகளை மிரட்டி கடந்த 5 வருடங்களாக காம கொடூர தந்தை பாலியல்  வன்கொடுமை  வந்த  செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் சுந்தரம்  கூலி தொழிலாளி. இவரது மகள்  விமலா. சேகருக்கு ஆண், பெண் என 10 பிள்ளைகள் பிறந்தனர். இதில், 3 பேர் இறந்துவிட்டனர்.  சுந்தரத்தின் 3வது குழந்தை தான்  விமலா. கடந்த 2013ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த தனது மகளை காம வெறி பிடித்த சுந்தரம் ஒரு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, சுந்தரம் இதே போன்று பலமுறை  விமலாவை மிரட்டி மிரட்டியே கடந்த 5 ஆண்டுகளாக அவரை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தரம்  விமலாவிடம் வழக்கம்போல  பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால், தந்தையின் ஆசைக்கு இணங்க மறுத்து விமலா பிளேடால் தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சுந்தரம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, விமலா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, மறுநாள் இதுகுறித்து சோமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  சுந்தரத்தை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர்,  அந்த காமக்கொடுரத் தந்தையை பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!