மகளை தலைகீழாக தூக்கி தரையில் அடித்துக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை…

Asianet News Tamil  
Published : Jan 06, 2017, 09:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
மகளை தலைகீழாக தூக்கி தரையில் அடித்துக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை…

சுருக்கம்

கண்ணூர்,

திண்டுக்கல்லில் குடும்பத் தகராறு காரணமாக, ஏழு வயது மகளை தலைகீழாக தூக்கி தரையில் அடித்துக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கண்ணூர் மாவட்டம் தலச்சேரி திருவோசுகட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (40). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2010–ஆம் ஆண்டு குடும்பத் தகராறு காரணமாக தனது ஏழு வயது மகள் ஆயிஷாவை கால்கள் இரண்டையும் பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்துள்ளார்.

இதில், பலமாக காயம் அடைந்த ஆயிஷா அந்த பகுதியில் இருக்கும் ஆஸ்பத்திரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆயிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து அப்துல்லாவை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு தலச்சேரி கூடுதல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், குற்றவாளியான அப்துல்லாவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1 இலட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

PREV
click me!

Recommended Stories

5 பொங்கல் சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து.. தெற்கு ரயில்வே சொன்ன காரணம் இதுதான்!
போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. பள்ளி மாணவிகள் பின்னே சென்று அட்ராசிட்டி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்