
தந்தை மரணமடைந்தது தெரியாமல் மாணவன் ஒருவன் நீட் நுழைவுத் தேர்வெழுதி வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு எழுதப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் நீட் தேர்வு மையத்துக்குச் சென்ற சென்ற தமிழக மாணவனின் தந்தை உயிரிழந்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி அருகே விளாக்குடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றுள்ளார். எர்ணாகுளத்தில் ஹோட்டல்கள் கிடைக்காத நிலையில், நீண்ட நேரம் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். ஒரு வழியாக விடுதி ஒன்றில் இடம் கிடைத்தது. இந்த நிலையில், அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரததில் சரியாகி உள்ளது.
இந்த நிலையில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், நீட் தேர்வு மையத்துக்கு சென்று தேர்வு எழுதி வருகிறார். மகனை தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு கிருஷ்ணசாமி அருகில் உள்ள இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
அப்போது அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கிருஷ்ணசாமியின் உயிர் பிரிந்தது. இதை அடுத்து, கிருஷ்ணசாமியின் உடல், அருகில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தந்தை இறந்தது தெரியாமல் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு எழுதி வருவதை அறிந்த மற்ற பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணசாமியின் உயிரிழப்புக்கு காரணம் முழுக்க முழுக்க அலைக்கழிப்பு மற்றும் மன உளைச்சால் ஏற்பட்டதே என்றும் அவர்கள் கூறுகின்றனர்.