டெல்லியிலும் பல்பு வாங்கிய தமிழக அமைச்சர் - ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கமிட்ட விவசாயிகள்

 
Published : Mar 31, 2017, 05:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
டெல்லியிலும் பல்பு வாங்கிய தமிழக அமைச்சர் - ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கமிட்ட விவசாயிகள்

சுருக்கம்

farmers opposed minister jayakumar

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்கச் சென்ற  நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கமிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வறட்சி நிவாரணம், காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள். திரைபிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், என பல்வேறு தரப்பினரும் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், போராடும் விவசாயிகளை இன்று நேரில் சந்தித்தார். 

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சருக்கு எதிராக திடீரென முழக்கமிடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது "விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறது.

விவசாயிகளுக்கு திட்டங்களை வழங்குவதன் மூலம் நாடு ஏற்றம் பெறும். வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செலுத்தி விட்டது. விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகையை மத்திய அரசு தான் பெற்றுத் தர வேண்டும். வறட்சி நிவாரணம் தர மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் தந்துள்ளது. கூடுதல் வறட்சி நிவாரணம் தருமாறு  மத்திய அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு ஜெயக்குமார் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். 

PREV
click me!

Recommended Stories

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு.! சுத்துப்போட்ட சுங்கத்துறை அதிகாரிகள்.! நடந்தது என்ன?
ஜன.20ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை.. சபாநாயகர் அறிவிப்பு