
நாமக்கல்
நாமக்கல்லில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்தச் செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் நிலம், பால் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் விவசாயம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம்" என்று ஆட்சியரின் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.