நிரந்தர வேளாண் உதவி இயக்குநரை பணியமர்த்த கோரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்...

Asianet News Tamil  
Published : Jun 18, 2018, 02:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
நிரந்தர வேளாண் உதவி இயக்குநரை பணியமர்த்த கோரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்...

சுருக்கம்

Farmers Association urging to hire Permanent Agriculture Assistant Director

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில்  நிரந்தர வேளாண் உதவி இயக்குநரை பணியமர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தமிழக விவசாயிகள் சங்க வட்டாரச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், நகரச் செயலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், "சவ்வாதுமலை ஒன்றியத்துக்கு நிரந்தர வேளாண் உதவி இயக்குநரை பணியமர்த்த வேண்டும்.

ஜமுனாமரத்தூரில் சிறுதானிய உற்பத்திக்கு மதிப்புக்கூட்டும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். 

பருவமழை தொடங்கும் முன்பாக செண்பகத்தோப்பு அணையில் ஷட்டரை பழுது பார்க்க வேண்டும். 

போளூர் வட்டத்தில் உள்ள ஏரி, நீர்ப்பிடிப்பு புதிகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், ஐயாயிரம், பழனி, சின்னகுட்டி மற்றும் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!