கடன் கட்டாத விவசாயியை அடித்துக் கொன்ற வங்கி ஊழியர்கள் ? நெஞ்சை உறைய வைக்கும் பரிதாபம் !!!

 
Published : Nov 05, 2017, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
கடன் கட்டாத விவசாயியை அடித்துக் கொன்ற வங்கி ஊழியர்கள் ? நெஞ்சை உறைய வைக்கும் பரிதாபம் !!!

சுருக்கம்

farmer killed by bank employees

திருவண்ணாமலை அருகே டிராக்டர் வாங்கிய கடனை கட்டத் தவறிய விவசாயியை வங்கி ஊழியர்கள் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி அருகே போந்தை என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஞானசேகரன்

இவர் தனது விவசாய பயன்பாட்டிற்காக வங்கியில் கடன் பெற்று  டிராக்டர் வாங்கியுள்ளா். தொடக்கத்தில் வங்கிக் கடனை முறையாக கட்டி வந்த ஞானசேகரன், கடந்த 2 ஆண்டுகளாக விளைச்சல் சரியாக இல்லாத காரணத்தால் டிராக்டருக்கு தவணை கட்ட தவறியுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் டிராக்டரை ஜப்தி செய்ய வந்தனர். அப்பொழுது வங்கி ஊழியர்களுக்கும் ஞானசேகரனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளில்  வங்கி ஊழியர்கள் ஞான சேகரனனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த விவசாயி ஞானசேகரன்  திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் ஞானசேகரன்  தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வங்கிக் கடனை செலுத்தாததற்காக விவசாயி ஒருவரை வங்கி ஊழியர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு