குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை.. உடல் சிதறி உயிரிழந்த 3 பேர்.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Feb 27, 2024, 12:48 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர் தனது முதல் மனைவியான விஜயலட்சுமியை பிரிந்து வெண்ணிலா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 


ராணிப்பேட்டை வாலாஜா ரயில் நிலையத்தில் தனது இரு குழந்தைகளுடன் வெண்ணிலா(35) என்ற பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர் தனது முதல் மனைவியான விஜயலட்சுமியை பிரிந்து வெண்ணிலா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஜெனிஸ்ரீ(5), தார்னிகா(3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவி விஜயலட்சுமி மீண்டும் வாழ விருப்பம் தெரிவித்து ஊர் திரும்பியதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. குறைந்தது டிக்கெட் விலை.. வெளியான மாஸ் அறிவிப்பு.!

இதனால் மனவேதனை அடைந்த வெண்ணிலா இன்று காலை தனது இரண்டு மகள்களுடன் வாலாஜா ரயில் நிலையத்திற்கு  வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அந்தியோதயா அதி விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில், 3 பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையும் படிங்க:  AIADMK - PMK Alliance: அதிமுகவுடன் பாமக கூட்டணியா? உண்மையை போட்டுடைத்த அன்புமணி.!

இதனையடுத்து வாலாஜ ரயில் நிலையத்தில் இருந்த 3 பேரின் உடல்களை மீட்ட காட்பாடி ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!