ரயில் ஏற முயன்ற பிரபல நடிகர் பலி...! சோகத்தில் மூழ்கிய  திரைத்துறை..!

 
Published : Jan 23, 2018, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ரயில் ஏற முயன்ற பிரபல நடிகர் பலி...! சோகத்தில் மூழ்கிய  திரைத்துறை..!

சுருக்கம்

familiar actor died in front of train in bombay

ரயில் ஏற முயன்ற பிரபல நடிகர் பலி....சோகத்தில் மூழ்கிய  திரைத்துறை..!

மராத்தி தொலைக்காட்சியில்,குழந்தை நட்சத்திரமாக சீரியலில்  நடித்து மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றவர் பிரபுல் பலேராவ்.

22 வயதான இவர் ’குன்கு’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்.பரயன் என்ற மராத்தி படத்திலும் நடித்துள்ளார்.மேலும் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த நிலையில் பரிதாபமாக  உயிரிழந்தார்.

மும்பையில் உள்ள மலாடு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு, காலை வீடு திரும்பும் போது சர்ச்கேட் செல்லும் ரயிலை பிடிக்க முயற்சித்தார்.

அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், ரயில் தண்டவாளத்தில்  சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இந்த சம்பவத்தால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை  வரை கலைஞர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!