
தஞ்சை சரபோஜி வாக்குசவடியில் கள்ள வாக்களிக்க முயன்ற அ.தி.மு.க.வினரை, தி.மு.க.வினர் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு, இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதிக்குட்பட்ட சரோபோஜி கல்லூரி வாக்குச்சாவடியில், அ.தி.மு.க.வினர் கள்ள வாக்களிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த தி.மு.க.வினர், கள்ள வாக்களிக்க முயன்ற 6 பேரையும் சிறைபிடித்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும், கள்ள வாக்களிக்க டோக்கன் வழங்கியதாக தேர்தல் நடக்கும் மற்ற தொகுதிகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.