
தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனத்தும் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரவு வாக்காளர் பட்டியலில் தமிழகம் ழுவது் சுார் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர் எண்ணிக்கையானது 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 ஆகக் குறைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை சேர்க்கவும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் பெயர்களை சேர்க்கவும் கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை சுமார் 1 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்க்க விரும்புபவர்கள் வருகின்ற 30ம் தேதி வரை தங்கள் பெயர்களை இணைக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் – ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலம் நீட்டிப்பு
இந்திய தேர்தல் ஆணையம், தனது கடித எண் 23/2025-ERS (Vol. II), நாள் 27.10.2025 மூலம், 01.01.2026-ஐ தகுதி தேதியாகக் கொண்டு, தமிழ்நாடு மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், தமிழ்நாடு மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை என ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையமானது தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, வாக்காளர் பதிவு விதிகள், 1960 இன் விதி 12 இன் உபவிதியின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருட்டு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலத்தை 30.01.2026 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும், இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியல் தொடர்பான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை உரிய முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.