
விழுப்புரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள துருவை பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலை குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடி விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.