எழும்பூரில் நடு சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ - டிரைவர் ஓடி தப்பினார்

 
Published : Oct 10, 2016, 05:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
எழும்பூரில் நடு சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ - டிரைவர் ஓடி தப்பினார்

சுருக்கம்

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே ஆட்டோ ஒன்று திடீரென தீப்பிடித்ததில் டிரைவர் தன்னை காப்பாற்றி கொள்ள தப்பி ஓடினார்.

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே நடுரோட்டில் ஆட்டோவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  ஆட்டோ  வருடந்தோறும் செய்ய வேண்டிய எஃப்.சிக்காக டிரைஅவர் ராஜேஷ் ஆட்டோவை பிரித்து பின்னர் அதை வாட்டர் சர்வீஸ் செய்து விட்டு பெட்ரோல் போட்டு விட்டு எடுத்து சென்றார். 

அப்போது பெட்ரோல் டாங்க் மூடி கீழே விழுந்து விட்டதால் பெட்ரோல் கசிந்து வெளியே வந்துள்ளது. இந்நிலையில் ஆல்பர்ட் தியேட்டர் அருகே ஆட்டோ செல்லும் போது பின்னாடி பெட்ரோல் டாங்கில் திடீர் என தீப்பிடித்துள்ளது. 

இதை பார்த்து அருகில் உள்ளவர்கள் அலற டிரைவர்  ராஜேஷ் ஆட்டோவில் இருந்து குதித்து தீயை அணைக்க முயற்சித்தார். முடியவில்லை இது பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு த்துறைக்கு  தகவல் கொடுக்க விரைந்து வந்த  எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். பெட்ரோல் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தகவல்.  

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!