முக்கிய அறிவிப்பு.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் இருந்து மாற்றுதிறனாளிக்கு விலக்கு.. முழு விவரம்..

By Thanalakshmi V  |  First Published May 27, 2022, 11:50 AM IST

தமிழகத்தில்‌ டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவல்துறை உள்ளிட்ட தேர்வுகளில்‌ கட்டாயத்‌ தமிழ்த்‌ தேர்வில்‌ இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித்‌ தகுதித்‌ தேர்வினை எழுதுவதில்‌ இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌, நடத்தப்படும்‌ தொகுதி 1, 2 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக்‌ கொண்ட தேர்வுகளில்‌, முதன்மை எழுத்துத்தேர்வான கட்டாய தமிழ்மொழித்தாள்‌ தகுதி தேர்வில்‌ இருந்து மாற்று திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விலக்கு, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மட்டுமல்லாமல்‌ மாநிலத்தின்‌ மற்ற தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்து போட்டித்‌ தேர்வுகளுக்கும்‌ மற்றும்‌ நியமன அலுவலர்களால்‌ தேவைப்படும்‌ தேர்வுகளில்‌ நடத்தப்படும்‌ எழுத்துத்‌ தேர்வுகளுக்கும்‌ பொருந்தும்‌.

40 சதவிகிதத்துக்கும்‌ குறைவான குறைபாடுகளைக்‌ கொண்ட மாற்றுத்‌ திறனாளிகளுக்கு பொருந்தும்‌. இவ்விலக்கினைப்‌ பெற விரும்பும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழ்‌ பெற வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க: கவனத்திற்கு!! இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு.. மாற்று தேர்வு தேதி அறிவிப்பு..

click me!