முன்னாள் அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை..நிராகரித்த நீதிமன்றம்..

Published : Feb 25, 2022, 04:53 PM ISTUpdated : Feb 25, 2022, 04:54 PM IST
முன்னாள் அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை..நிராகரித்த நீதிமன்றம்..

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி தண்டையார்பேட்டை காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக, திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் மீது அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். நரேஷின் சட்டையை கழற்றி, அரைநிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச்சென்று தாக்கினர்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அவர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவிய நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. வன்முறையை தூண்டும் வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருப்பதால் கொலை முயற்சி பிரிவும், தகவல் தொழில்நுட்ப பிரிவும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதனை சென்னை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் போடப்பட்ட இரண்டாவது வழக்கில் ஜாமின் வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கில் மார்ச் 9 ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கலவரத்தில் ஈடுபடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல், அவதூறாக பேசுதல், ஆயுதத்துடன் கொலை மிரட்டல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் 21ஆம் தேதி இரவு 8 மணியளவில் பட்டினப்பாக்கம் லித் கேஸ்டில் சாலையில் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தபோது ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என கூறிய நீதிபதி நீதிமன்றத்தில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!
அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்